Friday, May 11, 2007

கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை
பெருமையுடன் நடத்தும்
கவிதைத் திருவிழா

நாள்; : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : இந்திய தூதரக விழா அரங்கு

விழாவை சிறப்பிப்போர்

சாகித்ய அகாதெமி
விருது பெற்ற
புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா

முனைவர்- கவிஞர்
சேது குமணன்

மும்பை எழுத்தாளர்
சு.குமணராசன்
மற்றும்
தமிழ் உறவுகள்

அனைத்து தமிழ் உறவுகளையும்
அன்புடன் அழைக்கிறோம்

Friday, March 23, 2007

மனச்சிறகு - மு.மேத்தா

மனச்சிறகு - மு.மேத்தா

நூல் - மனச்சிறகு (கவிதை தொகுப்பு)
ஆசிரியர் - மு. மேத்தா
முதற்பதிப்பு - 1978

1978ம் ஆண்டு ‘மனச்சிறகு’ முதற்பதிப்பிற்கு ஆசிரியர் எழுதிய முன்னுரையில் எனை கவர்ந்த வரிகள் :

"கவிதை எப்போதும் கவிதைதான். அதில் புதிது பழையது இல்லை. கவிதையாக இருந்தால் அது ஒரு போதும் பழையதாவதில்லை"

"மரபுக் கவிதையோ புதுக் கவிதையோ எதுவாக இருந்தாலும் அதில் கவிதை இருக்கவேண்டும் என்பதுதான் இன்றியமையாதது.

படகு ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தால்தான் - அதில் பயணம் செய்யும் நாம் - விருப்பம் போல வலையை வீசிப் பார்க்கலாம்."

"இறுதியாக நான் சொல்லிக் கொள்வது இதுதான்: என் பழைய வறுகளுக்காக நான் புதிதாக வருத்தப்பட வேண்டியதில்லை - அவை தவறுகளாக இருந்தால். என்னுடைய பழைய சாதனைகளுக்காக நான் புதிதாகவும் மகிழ்ச்சி கொள்ளலாம் - அவை சாதனைகளாக இருந்தால்."

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘வரலாறு’.

வரலாறு

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!

ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!

வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
புகன்றிடும் மூலங்கள்!

இக்கவிதை முற்றிலும் புதிய கோணமாக தோன்றிற்று. அதனாலேயே பிடித்தும்போயிற்று. கடந்து போன நூற்றாண்டுகளில் நாம் எத்தனை ஆயிரம் மனிதர்களை இப்படி அறியாமல் இழந்தோமோ தெரியவில்லை. ஏடுகளில்
வெளிவந்த சரித்திரம் படைத்த மனிதர்களை பற்றியே நாம் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. பெயர்கள் வெளிவராத மனிதர்களை பற்றிச்சொல்லவும் வேணுமா. இப்படி விடுபட்ட உன்னத மனிதர்களை பற்றி யாராவது
விவரங்கள் சேகரிக்க முயற்சி செய்து பின்னாளில் உலகிற்கு அறியத்தந்ததுண்டா. அப்படி வெளிவந்த புத்தகங்களின் விவரங்கள் அறிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

"ஆயிரங்கோடி மனிதரில் ஒருசிலர் அடைகிற பிரபலங்கல், பல ஆயிரமாயிரம் பெயரை மறைத்திடும் அற்புதப் புதைகுழிகள்" - அவ்வரிகளை முழுமையாக ஒப்புக்கொள்ளமுடிந்தாலும் ‘சரித்திரம் என்பது விளம்பர மனிதரின் சாகச முத்திரைகள்’ என்று மொத்தமாக சாடுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.

தமிழக அரசு இவருக்கு வழங்கிய விருதுகள் :
இக்குறிப்புகள் ‘மனச்சிறகு’ புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து சுட்டது
பாவேந்தர் பாரதிதாசன் விருது (1986)
கலைமாமணி விருது (1997)
சிறந்த பாடலாசிரியருக்கான திரைப்பட வித்தகர் விருது - கண்ணதாசன் விருது (1998)

இவருடைய முதல் கவிதை தொகுப்பு - ‘கண்ணீர்ப் பூக்கள்’
- நதியல

மேத்தா பற்றி..

தமிழ்நாட்டிலிருந்து லண்டன் வந்திருந்த கவிஞர் மேத்தா இங்குள்ள Ceei tv என்னும் தொலைகாட்சி மூலம் முலம் நேரடியாக நேயர்களுடன் இன்று கலந்துரையாடினார்.

கவிதை, திரைப்பாடல் என்ற இரண்டு தண்டவாளங்களிலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இளைப்பாறாமல் ஓடிக்கொண்டிருக்கிற இலக்கிய ரயில் மு. மேத்தா!

தேகமழை நானாகும்
தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக
மேனியை மூடுவேன்.

என்று உருகி உருகி நெகிழ்கிற இந்தக் கவிஞர், ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
''சிறு வயதில் சினிமா பெரிய கனவு. வீட்டில் அழுது அடம்பிடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களைக் கொட்டக் கொட்டக் கண்விழித்துப் பார்த்திருக்கிறேன். பிற்பாடு தீவிர இலக்கியத்தில் நுழைந்து கவிதையில் புகழ்பெற்ற பிறகு, சினிமா ஆசை போய்விட்டது.

ஆனால், சினிமாவில் பாட்டு எழுதுபவர்கள்தான் இன்று கவிஞர்கள் என்று அறியப்படுகிற சூழ்நிலையில், நண்பர்கள் என்னை சினிமாவை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு பாடல் வாய்ப்பு என் வீடு தேடிவந்தது'' என்று சிரித்தபடி பழைய நினைவுகளில் மூழ்குகிறார்.

''அப்போ நாடக உலகில் பிரபலமாயிருந்த உடையப்பா என்பவர் 'அனிச்சமலர்' என்`றாரு படம் தயாரித்தார். வருடைய மகன் சுப்பிரமணியம் என் கல்லூரி நண்பர். என் கவிதைகளைப் படித்திருந்த உடையப்பா, அவரது படத்தில் நான் ஒரு பாடல் எழுத வேண்டுமென்று விரும்பி, என்னை சங்கர்-கணேஷிடம் அறிமுகப்படுத்தினார். சுற்றிலும் சினிமாக்காரர்கள். முற்றிலும் அறிமுக மாகாத சூழ்நிலை. பாடல் எழுத சரியான பயிற்சியில்லாத நான் சங்கர்- கணேஷ் தந்த அந்த மெட்டை என் தமிழால் தட்டுத்தடுமாறி தடவிப் பார்த்தேன்.

அதுதான் -

காத்து வீசுது புது காத்து வீசுது
இங்கே
கதிர்கள்கூட வயல்வரப்பில்
காதல் பேசுது

என்ற எனது முதல் பாடல். அந்தப் படம் ஓடவில்லை. எனது பாடலும் பிரபலமாகவில்லை.

அதற்குப் பிறகு பாட்டெதுவும் எழுதாமல் விலகியிருந்த என்னைத் திரும்பவும் சினிமாவுக்குள் அழைத்தவர் கமல்ஹாசன்தான். கமலும் பாலகுமாரனும்தான் என்னை மனோபாலாவிடம் அறிமுகப்படுத் தினார்கள். மனோபாலா
மூலமாக இளையராஜாவின் நட்பு கிடைத்தது. என் வாழ்க்கையின் திருப்புமுனை அது.

ரஜினி நடித்த 'வேலைக்காரன்' படத்தில் ஆறு பாடல்களை எழுதும் வாய்ப்பை எனக்குத் தந்தார் இளைய ராஜா.

பக்கத்து வீட்டுக்காரன் முகம் கூட தெரியாத இந்த நகரத்து மனிதர்களின் அவசர வாழ்க்கையும், மக்களை ஏமாற்றிப் பிழைக்கிற அரசியல் சுயநலமும் என்னை எப்போதும் ரணப்படுத்துகிற விஷயம், அதுதான்...


சிங்காரமா ஊரு... இது
சென்னையின்னு பேரு
ஊரச் சுத்தி ஓடுதையா
கூவம் ஆறு!
கட்சிகளும் வாங்கி இங்கே
கட்டிடங்கள் வெச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்
கட்டாந்தரை தானிருக்கு.

என்று என்னை எழுத வைத்தது. அதே படத்தில் 'வா.. வா.. வா... கண்ணா வா'ன்னு ஒரு காதல் பாடல். மென்மையான அந்தப் பாட்டில் அழுத்தமாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன்.

காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னைக் கண்டால்

Wednesday, March 21, 2007

பாராட்டுகிறோம்

மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி
புதுதில்லி
எளிய கவிதைகளுக்காகப் புகழ்பெற்ற கவிஞர் மு.மேத்தா, தமிழ் இலக்கிய படைப்பிற்காகச் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

'கண்ணீர்ப் பூக்கள்' என்ற நூல் மூலம் புதுக்கவிதையில் புகழ் பெற்றவர்; 'சோழ நிலா' என்ற புதினத்திற்காகப் பரிசு பெற்றவர்; 'என் மனவானில்சிறகை விரிக்கும்' எனத் திரைப் பாடல்களிலும் முத்திரை பதித்தவர், மேத்தா.

ஏற்கெனவே பல்வேறு விருதுகள் பெற்ற இவர், கல்லூரிப்பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். வானம்பாடிக் கவிஞர்களின் வரிசையில் வருபவர். அகில இந்திய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான அகாதெமி விருது வழங்கும் விழா, 2007 பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தில்லியில்நடைபெற உள்ளது.

இவ்விழாவில் கவிஞர் மு.மேத்தாவிற்கு சாகித்ய அகாதெமி விருதும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.இதற்கான அறிவிப்பு, தில்லியில் டிசம்பர் 21 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கு
சென்ற ஆண்டுக்கான
சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது மு.மேத்தா அவர்களின்
‘ஆகாயத்துக்கு அடுத்தவீடு’ நூலுக்காக வழங்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கவிதையுலகில்
சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கும்
பேராசிரியர் கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு கிடைத்திருப்பது
அனைவருக்கும் மகிழ்வளிக்கும் செய்தி.

புதுக்கவிதை உலகில்
புதியவர்களின் நுழைவுக்கு வாசலாக இருந்து
ஊக்கப்படுத்திய முன்னத்திஏர்களில்
குறிப்பிட தக்கவர் மு. மேத்தா.

ஆகவே புதியவர்களின் அன்பும், பாராட்டும்
அவருக்கு குவிந்தவண்ணம் உள்ளது.

நாமும்.. அன்போடு பாராட்டுவோம்.. வாழ்த்துவோம்

Friday, March 16, 2007

மு.மேத்தா நேர்காணல்



‘‘பெண்ணிய எழுத்து கண்ணிய எழுத்தாக இருக்க வேண்டும்!


‘‘ஒரு தமிழ்க் கவிஞர் இந்தியக் குடியரசுத் தலைவராகவும், இன்னொரு தமிழ்க் கவிஞர் தமிழகத்தின் முதலமைச்சராகவும் இருக்கிறபோது தமிழ்க் கவிதைகளுக்காக சாகித்ய அகாடமி விருது பெறுவதில் பெருமிதம்அடைகி றேன்! என்கிறார் கவிஞர் மு.மேத்தா.
‘‘இந்த விருது இரண்டு வித மகிழ்ச்சியை எனக்கு அளித்திருக்கிறது. ‘ஏன் இன்னும் உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கவில்லை? என்று இனிமேல் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள். இன்னொரு மகிழ்ச்சி, ‘இந்தவிருதை இவருக்கு ஏன் கொடுத்தார்கள்? என்று இதுவரை யாரும் குரல் எழுப்பவில்லை.

ஆனாலும், ஒரு விஷயம்... விருதுக்குரிய புத்தகத்தை, அது கடைசி மூன்று ஆண்டுகளில் வெளிவந்திருக்கிற புத்தகமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள். அது தவறு என்பது என் கருத்து. உதாரணமாக, 23 மொழிகளுக்கு, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு படைப்பாளிக்கு என விருது தருகிறார்கள். ‘புடவைக் கடை என்கிற ஆங்கிலக் கவிதை நூலுக்காக, சாகித்ய அகாடமி விருதை 30 வயதுப் பெண்மணி பெற்றார். குஜராத்தி மொழிக்கான விருது 88 வயதுப் பெரியவருக்குக் கிடைத்தது. ஒரு பக்கம் அந்தப் பெண்மணி அவருடைய முதல் நூலிலேயே விருதைப் பெற்றது மகிழ்ச்சி. இன்னொரு புறம், தள்ளாடித் தடுமாறி மேடையிலேயே விழுந்துவிடுகிற வயதில் ஒரு பெரியவருக்கும் விருது. அவர் இத்தனை ஆண்டுக் காலம் எவ்வளவு எழுதியிருப்பார்!

இத்தனைக் காலமும் அவர் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை என்று நியாயமான கோபம் தோன்றுகிறது. சில சமயங்களில் இதுபோன்ற அறியாமைகள் நிகழ்ந்துவிடுகின்றன. சில நல்ல படைப்பாளிகள்கூட சரியான கால கட்டங்களில் கவனிக்கப்படாமல் மறுக்கப்படுகிறார்கள். இலக்கிய வாழ்வின் அபத்தங்களில் இதுவும் ஒன்று!

‘‘இளம் படைப்பாளிகள் பற்றி...


‘‘நம்பிக்கை தருகிற மாதிரியான இளம் படைப்பாளிகள் இன்று நிறையவே இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நம்பிக்கை தருகிற சூழ்நிலை குறைந்து வருகிறது. மக்களின் ரசனைப் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இன்றைய இளம் படைப்பாளிகளின் சுயதரிசனங்களுக்கு ஏற்றதாக இல்லை.

இன்னொரு புறம், புதுக்கவிதைகளின் போக்கைப் பார்க்கும்போது மறுபடியும் மரபுக்கே போய்விடலாம் என்று தோன்றுகிறது. காரணம், மரபுக்கென்று ஒரு வரம்பு இருக்கிறது. ஒரு மொழியின் லாகவம் கைக்கு வந்தால்தான், மரபுக் கவிதை கை வரும். புவியரசு, சிற்பி, அப்துல் ரகுமான், பாலா, சக்திக்கனல், தமிழ்நாடன் என மரபில் எழுதி வெற்றி பெற்றவர்கள் புதுக்கவிதை எழுதியபோது, அதில் மரபின் அழகியலையும் நுட்பங்களையும் கொண்டு வந்தனர். புதுக்கவிதையின் புதுமையும் மரபின் செழுமையும் சேர்ந்து அந்த வடிவம் வெற்றிபெற்றது. இன்றைக்கு புதுக்கவிதை வேறொரு பாதைக்குப் போய்விட்டது. ஜோக்குகளை கவிதைகள் போல எழுதுகிறார்கள். கவிதைக்கென்று இருந்த அழகும் கம்பீரமும் போய்விட்டன. முன்பாவது வரிகளை மடித்து மடித்து எழுதி அதைப் புதுக்கவிதை என்றார்கள். இப்போது வரிகளையும் மடிக்காமல் அப்படியே உரைநடை வடிவில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இது எங்கே போய் முடியுமோ?

‘‘தற்போதைய பெண் கவிஞர்களின் வருகை பற்றி..?

‘‘பல பெண்கள் எழுதுவது மகிழ்ச்சியாக இருக்கிறது; சில பெண்கள் எழுதுவது அதிர்ச்சியாக இருக்கிறது. தன் வலியைக் காட்டுவதற்குப் பதிலாக, தன்னையே காட்டிவிடத் துடிக்கும் வேகம் தவறு என்பது என் கருத்து. ஏதாவது செய்து எல்லோரும் தன்னைத் திரும்பிப் பார்க்கவைத்துவிட வேண்டும் என்கிற எண்ணம் சரியானதல்ல. அவர்கள் இதை ஆரோக் கியமாக அவர்களுக்குள்ளேயே விவாதித்துக்கொள்வது நல்லது. ஆண்கள் அது பற்றிச் சொல்கிற போது அவர்களுக்குக் கோபம் வருகிறது. தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டியது எல்லோ ரின் கடமை. பெண்ணிய எழுத்து என்பது கண்ணிய எழுத்தாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!

& கண்களில் கனிவும் வார்த்தைகளில் மென்மையையும் கையாள்கிற மேத்தாவின் அலு வலகத்தில் இருந்து வெளியே வருகையில் கடக்கிற காரில் இருந்து கசிகிறது ஒரு பாட்டு... ‘நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா?


\ நா.இரமேஷ்குமார்

நன்றி; ஆனந்த விகடன்

Friday, March 9, 2007

கவிதை, திரைப்பாடல் என்ற இரண்டு தண்டவாளங்களிலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இளைப்பாறாமல்
ஓடிக்கொண்டிருக்கிற இலக்கிய ரயில் மு. மேத்தா!


தேகமழை நானாகும்
தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக
மேனியை மூடுவேன்.



என்று உருகி உருகி நெகிழ்கிற இந்தக் கவிஞர், ஒரு கல்லூரிப் பேராசிரியர்.


''சிறு வயதில் சினிமா பெரிய கனவு. வீட்டில் அழுது அடம்பிடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களைக் கொட்டக் கொட்டக்
கண்விழித்துப் பார்த்திருக்கிறேன். பிற்பாடு தீவிர இலக்கியத்தில் நுழைந்து கவிதையில் புகழ்பெற்ற பிறகு, சினிமா
ஆசை போய்விட்டது. ஆனால், சினிமாவில் பாட்டு எழுதுபவர்கள்தான் இன்று கவிஞர்கள் என்று அறியப்படுகிற
சூழ்நிலையில், நண்பர்கள் என்னை சினிமாவை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு பாடல்
வாய்ப்பு என் வீடு தேடிவந்தது'' என்று சிரித்தபடி பழைய நினைவுகளில் மூழ்குகிறார்.


''அப்போ நாடக உலகில் பிரபலமாயிருந்த உடையப்பா என்பவர் 'அனிச்சமலர்' என்`றாரு படம் தயாரித்தார்.
அவருடைய


மகன் சுப்பிரமணியம் என் கல்லூரி நண்பர். என் கவிதைகளைப் படித்திருந்த உடையப்பா, அவரது படத்தில் நான் ஒரு
பாடல் எழுத வேண்டுமென்று விரும்பி, என்னை சங்கர்-கணேஷிடம் அறிமுகப்படுத்தினார். சுற்றிலும்
சினிமாக்காரர்கள். முற்றிலும் அறிமுக மாகாத சூழ்நிலை. பாடல் எழுத சரியான பயிற்சியில்லாத நான் சங்கர்-
கணேஷ் தந்த அந்த மெட்டை என் தமிழால் தட்டுத்தடுமாறி தடவிப் பார்த்தேன். அதுதான் -


காத்து வீசுது புது காத்து வீசுது


இங்கே
கதிர்கள்கூட வயல்வரப்பில்
காதல் பேசுது


என்ற எனது முதல் பாடல். அந்தப் படம் ஓடவில்லை. எனது பாடலும் பிரபலமாகவில்லை.


அதற்குப் பிறகு பாட்டெதுவும் எழுதாமல் விலகியிருந்த என்னைத் திரும்பவும் சினிமாவுக்குள் அழைத்தவர்
கமல்ஹாசன்தான். கமலும் பாலகுமாரனும்தான் என்னை மனோபாலாவிடம் அறிமுகப்படுத் தினார்கள். மனோபாலா
மூலமாக இளையராஜாவின் நட்பு கிடைத்தது. என் வாழ்க்கையின் திருப்புமுனை அது. ரஜினி நடித்த 'வேலைக்காரன்'
படத்தில் ஆறு பாடல்களை எழுதும் வாய்ப்பை எனக்குத் தந்தார் இளைய ராஜா.


பக்கத்து வீட்டுக்காரன் முகம் கூட தெரியாத இந்த நகரத்து மனிதர்களின் அவசர வாழ்க்கையும், மக்களை ஏமாற்றிப்
பிழைக்கிற அரசியல் சுயநலமும் என்னை எப்போதும் ரணப்படுத்துகிற விஷயம், அதுதான்...


சிங்காரமா ஊரு... இது
சென்னையின்னு பேரு
ஊரச் சுத்தி ஓடுதையா
கூவம் ஆறு!


கட்சிகளும் வாங்கி இங்கே
கட்டிடங்கள் வெச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்
கட்டாந்தரை தானிருக்கு.

என்று என்னை எழுத வைத்தது. அதே படத்தில் 'வா.. வா.. வா... கண்ணா வா'ன்னு ஒரு காதல் பாடல். மென்மையான
அந்தப் பாட்டில் அழுத்தமாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன்.


காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னைக் கண்டால்
சீதை என்று துள்ளுவான்
- இப்படிப் போகிற பாடலின் இறுதியில்,


தாஜ்மகாலின் காதிலே
இராம காதை கூறலாம்
மாறும் இந்தப் பூமியில்
மதங்கள் ஒன்றுசேரலாம்.


என்று மத ஒற்றுமையைச் சொல்கிற மாதிரி எழுதினேன். ஒரு பாடலாசிரியனாக எனக்கிருக்கும் எல்லைக்குள் சமூகம்
சார்ந்த விஷயங்களைச் சொல்லவேண்டும் என்ற துடிப்பு எப்போதும் எனக்கிருக்கிறது.


ஆதாம்-ஏவாளின் காதல்தான் இந்த உலகம். என்னுடைய காதல் கவிதைகள் ஏராளமான இதயங்களை எனக்குத்
தந்திருக்கின்றன. 'ரெட்டைவால் குருவி' படத்துக்காக பாலுமகேந்திரா அழைத்துப் பேசினார். ஒருவனுக்கு இரண்டு
காதலிகள் என்று சூழலை அவர் விவரித்த போதே கிறுகிறுத்து விட்டது. நான் எழுதிக்கொண்டு சென்ற இரண்டு, மூன்று
பல்லவிகளில் 'ராஜராஜ சோழன்'தான் கம்பீரமாக இருப்பதாக அதை எடுத்துக் கொண்டார்.


உல்லாச மேடை மேலே
ஓரங்க நாடகம்..
இன்பங்கள் பாடம் சொல்லும்
என் தாயகம்.


கள்ளூரப் பார்க்கும் பார்வை
உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம்
சல்லாபமே


வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே.
அற்புதமான இசையும் ஜீவனுள்ள வரிகளும் சேர்ந்து இன்றைக்கும் அந்தப் பாடல் என் மனக் குளத்தில் கல்லெறிகிறது.


பாடலாசிரியராக இருப்பதில் இருக்கக்கூடிய சங்கடங்களும் நெருக்கடிகளும் வெளியில் பெரிதாகத் தெரியாது.
இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் ரொம்பப் பிரபலமாக இருந்த நேரம் அது. அவர் படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கிடைப்பதே
பெரிய விஷயம். அந்த நேரத்தில் அவரே அழைத்து ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். வரிகள் நன்றாக அமைந்து
போகவே, மேலும் சில பாடல்களைத் தந்தார். அதில் ஒரு பாடல் ஏற்கெனவே ஒரு கவிஞருக்குச் சென்று அவர் சரியாக
எழுதாததால், என்னை எழுதித் தருமாறு கேட்டார்கள். ஆனால், அதை நான் கண்டிப்பாக மறுத்துவிட்டேன். அது
இன்னொரு கவிஞரைக் காயப்படுத்துகிற மாதிரி ஆகிவிடும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.


இந்த மாதிரியான விஷயங்களில் நான் என்றுமே சமரசம் செய்துகொண்டது கிடையாது. இந்த என்னுடைய
குணத்தால்தான் அதிகமான பாடல்கள் எழுத முடியவில்லை என்று இன்றைக்கும் என் நண்பர்கள் சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பதில் சொல்கிற மாதிரி 'காசி' படத்தில் வருகிற 'என் மன வானில் சிறகு விரிக்கும்'
பாடலில் எழுதினேன் -


நான் பாடும் பாடல்
எல்லாம்
நான் பட்ட பாடே
அன்றோ
பூமியில் இதை யாரும்
உணர்வாரோ
மனதிலே
மாளிகைவாசம்
கிடைத்ததோ மரநிழல்
நேசம்
எதற்கும் நான்
கலங்கியதில்லை
இங்கே.
இந்தத் திரையுலக வாழ்க்கையில் எனக்கு நான் உண்மையாக இருந்திருக்கிறேன். அது போதும் எனக்கு.


பாடல்களைப் பொறுத்த வரைக்கும் எங்கேயோ, எப்போதோ நாம் கேட்டு ரொம்பவும் பாதித்த ஒரு வார்த்தையோ,
விஷயமோ நம்மையும் அறியாமல் பாட்டுக்குள்ளே வந்து விழுந்துவிடும். 'சூர்யவம்சம்' படத்தில் வருகிற 'நட்சத்திர
ஜன்னலில்' பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பேன் -


சித்திரங்களை பேசச்
சொல்லலாம்
தென்றலை அæசல்
ஒன்று போடச்
சொல்லலாம்
புத்தகங்களில்
முத்தெடுக்கலாம்
பொன்னாடை
இமயத்திற்கும்
போர்த்திவிடலாம்.


ரெக்கார்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்ரமன் என்னைக் கட்டிப் பிடித்துப் 'பிரமாதம்' என்று
பாராட்டினார். 'அப்படின்னா நீங்க கலைஞரைத்தான் பாராட்டணும்!' என்று சொன் னேன். திருக்குறளுக்கு உரை
எழுதும்போது 'திருக்குறளுக்கு நான் விளக்கவுரை எழுதமுடியாது. இமயமலைக்குப் பொன்னாடை போர்த்த முடியுமா?'
என்று கலைஞர் எழுதியிருந்தார். ஒருவர் வார்த்தைகளின் மேல் உள்ள அதிகப்படியான பிரியத்தால் இப்படி
நேர்ந்துவிடுவது உண்டு. சரியான இடத்தில் கையாண்டிருப்பதாக கலைஞரே அதைப் பாராட்டினார்.


'பாரதி' படத்தில் எழுதிய 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் என்னை மிகவும் திருப்திப்படுத்திய பாடல்.
பவதாரிணிக்கு தேசியவிருதைப் பெற்றுத்தந்தது அந்தப் பாடல் என்பதில் எனக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. இந்தப்
பாடலில் வருகிற -


தங்க முகம் பார்க்க அந்த சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனை தரலாம்...
என்ற வரிகள் கவிதையாக இருப்பதாக இலக்கிய நண்பர்கள் சொன்னார்கள். அதே நேரத்தில், பாடலின்
சூழ்நிலைக்கேற்ப இறங்கிவந்து,


பர்மா பஜார்.. சைனா பஜார்
பளபளக்குது பாண்டி பஜார்
பையன் போட நிஜாரில்லையே
குடியரசு ஆட்சி கண்டு
வருஷம் ரெண்டு பெப்பர்மெண்டு
வழங்குவதில் நியாயமில்லையே...
என்று சமூகத்துக்கு ஏதேனும் செய்தி தர விரும்புகிறேன்.


'காஷ்மீர்' படத்துக்காக சமீபத்தில் எழுதிய பாடலின் பல்லவி இது -



மலைகளில் அருவி பாடும் பாடல்
மேகங்கள் எழுதியதோ
மனிதர்கள் பூமியில் பாடும் பாடல்
தாகங்கள் எழுதியதோ?


மனிதனுடைய தேடல்தான் இசை, கவிதை எல்லாமே. என்னுடைய தேடல்கள்தான் பாடல்களாகி இருக்கின்றன. நான்
எப்போதும் தேடுபவனாகவே இருப்பேன்.''